‘ரா’ (RAW) எனப்படும் மத்திய அரசின் வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனிக்கும் பிரிவின் தலைவராக சமந்த் கோயலை பிரதமர் நரேந்திர மோடி நியமித்துள்ளார்.
சமந்த் கோயல் 1984ம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடந்த இந்திய விமானப் படைத் தாக்குதல் மற்றும் 2016ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவற்றை திட்டமிட்ட குழுவில் சமந்த் கோயலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990களில் பஞ்சாப்பில் தலைவிரித்தாடிய பயங்கரவாத செயல்களை அடக்கியதில் சமந்த் கோயலுக்கும் பங்கு உண்டு. இவரை ரா பிரிவின் தலைவராக பிரதமர் நியமித்துள்ளார்.
அத்துடன் ஐபி (IB) எனப்படும் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவராக அரவிந்த் குமார் நியமிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரவிந்த் குமார் 1984ம் ஆண்டு அசாம் - மேகாலயா பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். நக்சல் விவகாரங்கள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கையாள்வதில் இவர் நிபுணர் எனக் கூறப்படுகிறது.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix