[X] Close

டாஸ் வென்றது நியூஸிலாந்து : பாகிஸ்தான் முதல் பவுலிங்

New-Zealand-vs-Pakistan---NZ-won-the-Toss

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பிரிட்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மழையால் தாமதமானது. இந்நிலையில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸை கேட்ட பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் டைல் தேர்வு செய்தார். ஆனால் ஹெட் விழுந்தது. இதனால் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


Advertisement

இதற்கிடையே 6 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்று புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது. இல்லையென்றால் அது அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே அந்த அணி முழுமூச்சுடன் களம் காணும். அதேசமயம் 6ல் 5 போட்டிகளை வென்று 2வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும். எனவே இந்த அணியும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close