[X] Close

மதுபோதையில் மகனை அடித்து துன்புறுத்திய தந்தை மீது வழக்குப்பதிவு 

Police-filed-a-case-against-the-father-for-assaulting-son-in-kerala

மதுபோதையில் எட்டு வயது மகனை அடித்து துன்புறுத்திய தந்தை மீது தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர்கள் பிஜு-சிந்து தம்பதினர். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான பிஜு, தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Image result for மகனை அடித்து துன்புறுத்திய தந்தை


Advertisement

இந்நிலையில் சம்பவத்தன்று மனைவி சிந்துவுடன் சண்டையிட்ட பிஜு அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தனது தாயை அடித்த துன்புறுத்திய தந்தை பிஜுவை மகன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிஜு, தனது மகனை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் மகனின் தலைமுடியை பிடித்து சுவற்றில் மோத செய்ததில் அந்த சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து தாய் சிந்து இச்சம்பவம் குறித்து அடிமாலி காவல் நிலையத்தில் தந்தை பிஜு மீது புகார் அளித்தார். 

இதனையடுத்து சிறுவனின் தாயார் சிந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் தந்தை பிஜு மீது சிறார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை தந்தை பிஜுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவன் உடலில் காயங்கள் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது கணவர் மகனை அடிக்கும் போது தடுத்ததற்காக தன்னையும் வயிற்றில் தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், தனது பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை எல்லாம் எரித்துவிட்டதாகவும் தாய் சிந்து வேதனை தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close