[X] Close

“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு

-Congress-is-not-India----PM-Modi-Speech-in-Rajya-Sabha

காங்கிரஸ் வாக்காளர்களை அவமதிப்பதாகவும், வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு என்றும் பிரதமர் மோடி பேசினார்.


Advertisement

பிதரமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்ற மாநிலங்களையில் உரையாற்றினார். அதில், “மோடி பெற்ற வெற்றி, நாடு
அடைந்த தோல்வி எனக் கூறுவது ஜனநயாகத்தை அவமானப்படுத்துவதாகும். காங்கிரஸ் தொடர்ந்து இந்திய வாக்காளர்களை
அவமதித்து வருகிறது. வாக்காளர்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. காங்கிரஸின் வரம்பு மீறலுக்கு எல்லை
உண்டு. 

காங்கிரஸ் கட்சியின் தோல்வியை நாட்டின் தோல்வியாக பார்க்கக்கூடாது.  நாங்கள் வெற்றி பெறாவிட்டால், இந்தியா தோல்வி
அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ? நிலையான, நீடித்த வளர்ச்சியை தான்
மக்கள் விரும்புகிறார்கள். பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். 2வது முறையாக
நாட்டிற்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி. இதை 2019-ல் மக்கள் நடத்திய யுத்தத்தினால் கிடைத்த
வெற்றியாக பார்க்கிறேன்” என்று கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close