
புல்வாமா தாக்குதலுக்கு காரணம் உளவுத்துறையின் தோல்வி அல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக எம்பி சையத் நாசர் உசேன் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அத்துடன் புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சதிப் பின்னணி, தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 140க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.