கும்பகோணம் அருகே கூடை பின்னும் குறவர் இன குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள பௌவுன்ரிகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். குறவர் இனத்தை சேர்ந்த இவருக்கு மனோஜ்,ஜெகதீசன் மற்றும் மகேந்திரன் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற இந்த மூன்று மாணவர்களும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் மாணவர்கள் கிடைக்காததால், திருநீலக்குடி காவல் நிலையத்தில் மாணவர்களின் தந்தை முருகேசன் புகார் அளித்தார். முருகேசன் அளித்த அந்த புகாரின் அடிப்படையில் திருநீலக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மூன்று மாணவர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!