இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் காயமடைந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். அவரும் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்திய அணி நாளை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை மான்சஸ்டர் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் நேற்று இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது புவனேஷ்வர் குமாரும் பவுலிங் பயிற்சியை மேற்கொண்டார். புவனேஷ்வர் குமார் வலைப் பயிற்சி செய்யும் விடீயோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதனையடுத்து புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டுவிட்டதாக அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஏதிர்கொண்டது. அந்த போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தான் வீசிய 3-வது ஓவரின்போது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த புவனேஷ்வர் குமார் தற்போது காயத்திலிருந்து குணமாகி மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். காயத்திலிருந்து குணம் அடைந்த போதிலும் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டடீஸ்க்கு ஏதிரான 34-வது லீக் ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் எனவே தெரிகிறது.
ஆனால் இந்திய அணி அடுத்தடுத்து இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுடன் மோதவுள்ளது. அந்தப் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயத்தில் இருந்து மீண்டுவிட்டாலும் புவனேஷ்வர் குமார் போதியளவில் பயிற்சிகள் மேற்கொண்ட பின்புதான் இந்திய அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்