Published : 08,May 2017 11:43 AM

டாஸ்மாக் கடை கூடாதா? கிராம சபை தீர்மானம் போதும் என்கிறது நீதிமன்றம்

Village-Council-Didn-t-allow-Tasmac-Shop--highcourt

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து புதிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.திருவண்ணாமலை, சேலம், கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைதியாக மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கிராம சபையில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்