நாட்டிலேயே சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது என்று ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ள சுகாதார தரவரிசை பட்டில் மூலம் தெரிவித்துள்ளது.
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து நிதி ஆயோக் கணக்கிட்டு தரவரிசை ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் தரவரிசையை நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுகிறது. இந்தத் தரவரிசையில் நாட்டிலுள்ள மாநிலங்களை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா, மகாராஷ்டிரா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் கடைசி இடத்தில் உத்திரபிரதேசம் உள்ளது. இதற்கு முன்பு பிகார் மற்றும் ஒடிசா இடம்பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிஷோரம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.
இந்தத் தரவரிசையை வெளியிட்ட நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், “இந்தச் சுகாதார குறியீடு மூலம் மாநிலங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஆயோக் முற்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் நிதி ஆயோக்கின் உறுப்பினரான வினோத் குமார் பவுல், “மத்திய அரசு சுகாதாரத்துறைக்கான செலவினத்தை 2.5%மாக அதிகரிக்கவேண்டும். அதேபோல மாநில அரசுகள் தங்களின் சுகாதாரத்திற்கான செலவினங்களை 4.7% முதல் 8% வரை அதிகரிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தரவரிசை அறிக்கையில் மாநிலங்களின் சுகாதார தரத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிகார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் சுகாதாரத்துறையிலுள்ள பல காரணிகளில் சரியாக செயல்பாடததே இங்கு சுகாதாரத்தின் தரம் குறைய காரணமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக பிகார் மாநிலம் கருவுறுதல் சதவிகிதம், குறைந்த எடைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், காசநோய், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றில் சரியாக செயல்படவில்லை என்று அறிக்கை தெரிவித்தது.
இந்த அறிக்கை மொத்தமாக இந்தியாவிலுள்ள மாநிலங்கள் இன்னும் தங்களின் சுகாதாரத்துறை உயர்த்தவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Loading More post
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்