[X] Close

புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை- சவரன் 26,424 ரூபாய்

Gold-Rate-increased

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.


Advertisement

அன்றிலிருந்து இன்றுவரை என்றுமே மவுசு குறையாமல் காணப்படுவது தங்கம். இதன் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 17-ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,132-க்கும், ஒரு சவரன் ரூ.25,056-க்கும் விற்பனை ஆனது. ஆனால் ஜனவரி 22-ஆம் தேதி அதாவது வெறும் ஐந்து நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஆயிரம் ரூபாய் அதிகரித்து ரூ.26,072-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகாவது தங்கத்தின் விலை குறையுமா எனக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது தங்கத்தின் தொடர் விலையேற்றம்.


Advertisement

நேற்றைய விலையை விட இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 38 ரூபாய் விலை அதிகரித்து 3,303-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.26,424 ஆகும். அதாவது ஒரு வாரத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1,500 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனால் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள், நகை வாங்க பணம் சேர்ப்பவர்கள் என எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இனிமேலாவது தங்கத்தின் விலை குறையுமா என்ற ஏக்கத்தில் அவர்கள் உள்ளனர். சர்வதேச சந்தை நிலவரம், தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close