விஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது
நடிகர் விஷாலின் தந்தையிடம் மோசடி செய்த கல்குவாரி அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் விஷாலின் தந்தையிடம் ரூ. 86 லட்சம் மோசடி செய்தாக கல்குவாரி உரிமையாளர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் விஷால் தந்தை ஜி.கே ரெட்டி. இவர் ஒரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். பிரபல தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கான ராக்ஷஸி என்ற படத்தில் முதல் முறையாக ராதாரவி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நேத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.
இவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அவர் குறிப்பிட்டபடி கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமால் இழுக்கடித்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்