சென்னை பல்லாவரத்தில் அதிமுக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில், பெண் கண்முன்னே ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் சுந்தரேசன் தெருவில் வசித்து வரும் அதிமுக பிரமுகர் விஜயகுமார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். அதில் படுகாயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல்துறையினர், சரவணன், விஜயகுமார், பிரகாஷ்ராஜ், நவீன்ராஜ் ஆகிய நால்வரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் அந்த விசாரணையின் போது, வேறு ஒரு வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் விஜயகுமார், பெண் ஒருவரின் கண் முன்னே சரவணனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தமது நண்பர்கள் விஜயகுமார், பிரகாஷ்ராஜ், நவீன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை பல்லாவரம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்