இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லையா ? அமெரிக்காவின் அறிக்கைக்கு கடும் கண்டனம்

இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லையா ? அமெரிக்காவின் அறிக்கைக்கு கடும் கண்டனம்
இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லையா ? அமெரிக்காவின் அறிக்கைக்கு கடும் கண்டனம்

இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்ற அமெரிக்காவின் அறிக்கைக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த வதந்தியின் பேரில், சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. 

மத சுதந்திரம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட இந்த அறிக்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ''இந்தியா பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் ஜனநாயக நாடு. சிறுபான்மையினர் உள்பட அனைவரின் அடிப்படை உரிமைகளும் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஜனநாயகத்தையும், பன்முகச் சமூகத்தையும் கொண்ட நாடு இந்தியா. மதச்சார்பின்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது'' என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com