தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடங்கியது... போலீஸ் பாதுகாப்பு..!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடங்கியது... போலீஸ் பாதுகாப்பு..!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடங்கியது... போலீஸ் பாதுகாப்பு..!

நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டது குறித்து அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன் முறையிடப்பட்டு தேர்தலை நிறுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூவாயிரம் பேருக்கு மேல் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களில் வெறும் 61 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியது தவறு எனக்கூறி பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தலை நடத்தவும் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க துணை ஆணையருக்கும் நீதிபதி‌ உத்தரவிட்டார்.

இதனையடுத்து மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் சங்கர் தேர்தலில் கிழக்கு சென்னை காவல்துறை இணை ஆணையர் ஜெயகவுரி தலைமையில் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 50 போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com