காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை என திமுகவின் மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என கேள்வி எழுப்பினார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இது குறித்து கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த கே.என்.நேருவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த பேச்சு குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை. திமுக தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டுவன் நான். உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்பது கலகத்தின் குரல் அல்ல. ஒரு மாவட்ட செயலாளராக எனது கருத்தை நான் கூறினேன்.
முடிவெடுக்கும் இடத்தில் நான் இல்லை. அனைத்து முடிவுகளையும் தலைவர் ஸ்டாலின் எடுப்பார். காலையில் நான் பேசியதற்கு கட்சியில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நானே தன்னிச்சையாக தற்போது பேட்டி அளிக்கிறேன். நான் ஒரு திமுககாரர். திமுகதான் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்பேன். அதேபோல் திமுககாரர்தான் மேயராக வேண்டும் எனவும் நினைப்பேன். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்போம் என காங்கிரஸ் கூறியதாக சில செய்திகளில் படித்தேன். அதன் அடிப்படைலேயே இந்த கருத்தை கூறினேன்” எனத் தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்