“ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் நீர் எடுத்துச் சென்றால் போராட்டம்”- துரைமுருகன்

“ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் நீர் எடுத்துச் சென்றால் போராட்டம்”- துரைமுருகன்
“ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் நீர் எடுத்துச் சென்றால் போராட்டம்”- துரைமுருகன்

ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக திமுக எடுத்துரைக்கும் என்றும் அவர் கூறினார். தண்ணீர் பிரச்னையை ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால் அரசாங்கம் அதனை கடவுளிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுகிறார்கள் என்றால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com