[X] Close

அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் யோகா தரை விரிப்புகள் திருட்டு

Haryana--People-loot-yoga-mats-at-Yoga-event-attended-by-Shah--Khattar

ஹரியானாவில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யோகா செய்ய பயன்படுத்தும் தரை விரிப்புக்காக ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். 

5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினம் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். ஹரியானாவின் ரோஹ்தக் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதல்வர் கத்தார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்த மக்கள் தங்களுக்கு வழங்கிய யோகா விரிப்பை எடுத்துச் செல்ல ஆர்வம் காட்டினர். அப்போது, ஒருவர் விரிப்பை மற்றொருவர் மாறிமாறி எடுத்துச் சென்றதாக தெரிகிறது. அதனால், விரிப்புக்காக ஆண்‌, பெண் என ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. யோகா விரிப்பை ஒருவரிடம் இருந்து ஒருவர் பிடிங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது. 


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close