[X] Close

ஜெயிச்சே ஆகணும்: கட்டாயத்தில் ஹைதராபாத்!

hyderabad-in-stress

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஹைதராபாத் அணி, ‌பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி, ஹைதராபாத்தில் இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 12 போட்டிகளில் விளையாடி, 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது ஹைதராபாத் அணி. அடுத்தச் சுற்றுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஆட இருக்கிற இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே இன்று நடக்கும் போட்டி, ஹைதராபாத் அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும்.

மும்பை அணி 9 வெற்றிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான தகுதியை உறுதி செய்துவிட்டது. மும்பை, ஹைதராபாத் அணிகள் இதுவரை 9 முறை சந்துள்ளன. அதில் ஐந்து போட்டிகளில் மும்பையும், 4 ஆட்டங்களில் ஹைதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.


Advertisement
Related Tags : hyderabad iplhyderabad ipl

Advertisement

Advertisement
[X] Close