Published : 21,Jun 2019 07:31 AM
நீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்

நீட் மற்றும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து மக்களவையில் எம்.பி. திருமாவளவன் பேசினார்
இன்று மக்களவையில் பேசிய எம்.பி. திருமாவளவன் நீட் பிரச்னை குறித்தும், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும் குரல் கொடுத்தார். அப்போது பேசிய அவர், நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். விலக்கு அளித்தால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் தண்ணீர் பிரச்னையால் தமிழகம் படும் இன்னல்களை குறிப்பிட்டு பேசிய அவர், காவிரி நீரை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். காவிரி நீர் திறப்பு குறித்த திருமாவின் பேச்சுக்கு கர்நாடகா எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமாவளவனுக்கு ஆதரவாக எம்.பி. ரவிக்குமாரும் மக்களவையில் பேசினார்.
இதேபோல் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் பேசினார். அதில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து காவிரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.