[X] Close

அரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு !

A-student-from-London-is-currently-studding-Nannaadu-Government-School

விழுப்புரத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் மகன் லண்டனில் படித்து வந்த நிலையில், தற்போது நன்னாடு அரசுப்பள்ளியில் தங்களது மகனை சேர்த்து பலரது கவனைத்தையும் ஈர்த்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் நன்னாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது. 65 மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் தற்போது லண்டனில் படித்து மாணவர் ஒருவர் சேர்ந்து பலரது கவனைத்தையும் ஈர்த்துள்ளனர். தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளும் இப்பள்ளியில் செய்யப்பட்டுள்ளன. முறையான குடிநீர், பாதுகாப்பான கழிவறை என நன்னாடு அரசுப்பள்ளி சிறப்பாக செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் இறைவணக்கத்துடன் யோகா பயிற்சி அளிக்கப்படுவதுடன், மாணவர்கள் உற்சாகமாக கல்வி பயிலும் விதமாக ஆசிரியர்களும் எளிதான முறையில் பாடம் நடத்துகின்றனர். 


Advertisement

இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து பள்ளிக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார். மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களின் உடல்நிலையில் அக்கறை கொண்டு, மூலிகை பொருட்களின் கூடிய கஞ்சி மாணவர்களுக்கு வழங்கப்படுவது இப்பள்ளியின் கூடுதல் சிறப்பாகும்.

இந்நிலையில் இப்பள்ளியைப் பற்றிய ஒரு படக்காட்சி கடந்த ஆண்டு சமூகவலைதளங்களில் பரவியது. அதனை பார்த்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த லண்டன் தம்பதியான சுபாஷினி- சிவப்பிரகாஷ் தங்களுடைய இளைய மகன் அன்புச்செல்வனை இந்த தொடக்கப்பள்ளியில் சேர்த்து அனைவரது கவனைத்தையும் பெற்றுள்ளனர். லண்டனில் பணியாற்றி வரும் இந்த தம்பதி அரசுப்பள்ளியில் பயின்றதால் என்னவோ, அதன் அருமையை உணர்ந்த லண்டனில் இருந்து தன் மகனை அழைத்து வந்து இந்த அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர். 

அரசு பள்ளி சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதால், தங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளதாக அன்புச்செல்வனின் தாய் சுபாஷினி தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் கூடுதல் திறன்களையும் வளர்த்து வருவதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வருவதாக தலைமை ஆசிரியர் கூறுகின்றார். பெரும் ஆசைகளோடும், கனவுடனும் மூழ்கியிருக்கும் இந்த மாணவர்களின் எதிர்காலம், அறிவாற்றல் நிறைந்த வனமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தகவல்கள் :ஜோதி நரசிம்மன்,செய்தியாளர்-விழுப்புரம்

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close