[X] Close

விஜய் சங்கருக்கு காயம் - இந்திய அணிக்கு பின்னடைவா? 

World-Cup-2019--Team-India-get-another-injury-scare-after-Vijay-Shankar-hit-on-toe

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விஜய் சங்கருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 


Advertisement

நாளை மறுதினம் ஆஃப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் சவுத்ஹாம்ப்டன் நகரில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேட்டிங் பயிற்சி செய்துக் கொண்டிருந்த விஜய் சங்கருக்கு, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தால் பாதத்தில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  


Advertisement

இருப்பினும் கவலையளிக்கும் அளவிற்கு பெரிய காயம் இல்லை என இந்திய அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தவான், புவனேஷ்வர்குமார் ஆகியோரின் காயம் இந்திய அணியை வாட்டி வரும் நிலையில் சங்கருக்கு ஏற்பட்டுள்ள காயம் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் புவனேஷ்குமார் காயத்தில் இருந்து மீளாத பட்சத்தில் இஷாந்த் சர்மா அல்லது கலீல் அகமது அணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement
[X] Close