தமிழகத்தில் கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொத்தடிமைகளாக பணிபுரிபவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொத்தடிமை முறையை முடிவுக்குக் கொண்டுவர நிலையான செயல்பாட்டு வழிமுறைக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்தடிமைகள் குறித்த தகவல் கிடைத்த உடன் அவர்களை மீட்பதற்காக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை கொண்டு குழு அமைக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் இரண்டு பெண் அதிகாரிகளாவது இருக்க வேண்டும், சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் இடம்பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும், உடனடி நிவாரணமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும், ஒருவேளை இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தவர்கள் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டால் அதற்கென வழங்கப்படும் நிவாரணத் தொகை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவைகளும் அரசின் பல்வேறு திட்டங்களும் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. கொத்தடிமைகளை வைத்திருப்பவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!