Published : 07,May 2017 11:20 AM

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டார்: கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

delhi-CM-Aravind-kejriwal-involved-in-corruption-said-kabil-mishra

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டதாக அமைச்சரவையிலிருந்து

நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக கபில் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து

கெஜ்ரிவால் நீக்கினார். ஊழல் புகாரில் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கும் அமைச்சர்

சத்யேந்திர ஜெயினிடம் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் 2 கோடி ரூபாய் பணம் பெற்றதாக கபில்

மிஸ்ரா கூறியுள்ளார்.

இது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலையும் சந்தித்து அவர் புகார்

கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித் குறித்து ஊழல் புகார் அளித்த போதும்

கெஜ்ரிவால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்