[X] Close

அதிமுகவிற்காக தியாகம் செய்யாதவர்கள் மூச்! ஜெயகுமார் காட்டம்

jeyakumar-accuses-maithreyan

அதிமுகவிற்காக எந்த தியாகத்தையும் செய்திராத மைத்ரேயன், ஆட்சியில் யாரெல்லாம் இருப்பார்கள் எனப் பேசுவது வேடிக்கையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.


Advertisement

அதிமுக ஆட்சி 2021க்கு பிறகு தொடரும். அதில் ஜெயக்குமார் கம்பெனி இருக்காது என பன்னீர்செல்வம் அணியை அணியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கூறியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அடுத்த தேர்தலிலும் அதிமுகவே ஆட்சிக்கு வரும். கஷ்டப்பட்டவர்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாம். கட்சிக்கு சம்பந்தமில்லாத மைத்ரேயன் கூறுவதை ஏற்க முடியாது. சந்தர்ப்பவாதிகள் காலத்தால் அடையாளம் காட்டப்படுவார்கள். தமிழக அரசின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்படுகிறது. தமிழக அரசின் பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லை. 140 வருடங்களில் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவுகிறது. தமிழகத்தில் குடிநீர்ப்பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாரையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை. பன்னீர்செல்வம் அணியினரை ஏற்க தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.


Advertisement
Related Tags : jeyakumarjeyakumar

Advertisement

Advertisement
[X] Close