Published : 07,May 2017 03:31 AM
பாகுபலி டெபிட் கார்டு: ஐசிஐசிஐ சலுகை

இந்தியத் திரையுலகில் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து மாபெரும் புதிய சாதனையாக, ஒரே வாரத்தில் 800 கோடி வசூலித்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது பாகுபலி.
பாகுபலி புடவை, பாகுபலி டீசர்ட் எனத் தொடர்ந்த பாகுபலி ஃபீவர் இப்போது வங்கி டெபிட் கார்டில் அச்சிடும் அளவுக்கு வந்துள்ளது. முக்கிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த பாகுபலி போஸ்டரை தனது டெபிட் கார்டின் முன்பக்க படமாக வடிவமைத்துக்கொள்ளும் ஆப்ஷனை வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முக்கிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,024 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.9,726 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.9,801 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானம் ரூ.68,062 கோடியில் இருந்து ரூ.73,660 கோடியாக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.