[X] Close

ஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர் 

PM-Modi-working-on-new--updated-edition-of-his-book----Exam-Warriors---

பிரதமர் மோடி சமீபத்தில் எழுதிய ”எக்ஸாம் வாரியர்” புத்தகம் அனைவரும் அறிந்ததே. சுமார் 20 லட்சம் காப்பிகள் விற்று சாதனை படைத்தது அந்த புத்தகம். தேர்வெழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், தேர்வு முடிவுகளை எப்படி அணுக வேண்டும் என் அபல விஷயங்களை பிரதமர் கூறியிருந்தார். மாணவர்கள் பலருக்கும் பரிசாக அந்த புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டன. பாஜக கூட்டங்களில் புத்தகத்தை பலரும் கேட்டு வாங்கிச் சென்றனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி சில பெற்றோர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒருவர் “ எனது மகன் நிறைய வீடியோ கேம்ஸ் விளையாடுகிறான். அதிலேயே மூழ்கி கிடக்கிறான், எனக்கு மிகுந்த பயத்தை உண்டு பண்ணுகிறது” என கவலைப்பட்டார். பப்ஜி விளையாகிறான என உடனே கேட்டு அந்த கேள்வியை தெளிவுபடுத்திக் கொண்டார் பிரதமர். இதனையடுத்து மாணவர்கள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர, எக்ஸாம் வாரியார் புத்தகத்தின் அப்டேட்டட் வெர்சனை எழுத முடிவு செய்தார். 


Advertisement

இது குறித்து பேசிய பென்குயின் பதிப்பகத்தார் “ தகவல் உண்மைதான், முதலில் சில பக்கங்களை மட்டும் இணைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமரின் திடீர் முடிவால் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டி இருப்பதை உணர்ந்தோம். முதல் புத்தகம் சக்கை போடு போட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதியில் முற்றிலும் அப்டேட்டட் ஆன எக்ஸாம் வாரியர் வெளியாகும்” என கூறினர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close