சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின் போது பேருந்து கூரையிலிருந்து கீழே விழுந்து மாணவர்கள் அடிபட்டுக் கொண்டனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் சென்னை மக்களும், மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் ஜூன் மாதத்தில் இம்சையை சந்திக்க தொடங்கியுள்ளனர். காரணம் கல்லூரி மாணவர்கள். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி நேற்று தொடங்கிய நிலையில் மாணவர்களின் அட்டூழியம் பேருந்துகளில் தொடங்கியது. சட்டவிரோதமாக பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் மாநகரப் பேருந்துகளையும், அதிலிருந்தவர்களையும் பாடாய்ப்படுத்திவிட்டனர். மாணவர்களின் இந்த அட்டூழியத்தின் போது ஒரு விபரீதமும் நடந்தேறியது.
அரசு மாநகரப் பேருந்தின் பேருந்தின் கூரையில் சுமார் 20 மாணவர்கள் அமர்ந்தவாறு கூச்சலிட்டபடி சென்றனர். பேருந்தின் எண் கொண்ட பலகையையும் அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர். அப்போது பேருந்தின் முன் பைக்கில் சென்று கொண்டிருந்த இரு மாணவர்கள் திடீரென பிரேக் போட்டனர், இதையடுத்து பேருந்து ஓட்டுநரும் பிரேக் போட்டதால் மேலே அமர்ந்திருந்த மாணவர்கள் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டனர். கீழே விழுந்த மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
பேருந்து தின ரகளையில் ஈடுபட்ட பிற மாணவர்களையும் காவல்துறையினர் விசாரித்து பின்னர் எச்சரித்து அனுப்பினர். இச்செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களின் வாழ்வே வீணாகிவிடும் என்றும் எனவே அவர்கள் இதுபோன்று செய்வதை கல்லூரிகள் தடுக்க வேண்டும் என்கின்றனர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix