Published : 06,May 2017 11:50 AM
வாயு கசிவால் 300 மாணவிகள் பாதிப்பு.. அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல்

டெல்லியில் அரசு பள்ளி அருகே நின்ற லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால், 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை டெல்லி முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தெற்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள பெண்கள் அரசு பள்ளியின் அருகே இருந்த கண்டெய்னர் லாரியில் இருந்து திடீரென எரிவாயு கசிந்ததால் பள்ளியில் மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.