தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள சில தங்கும் விடுதிகள் தண்ணீர் பற்றாகுறையால் மூடப்பட்டு வருகின்றன.
பருவமழை பொய்த்து போனதால் நாடு முழுவதும் வறட்சி நிலவி தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மற்றும் அதன் சுற்று வாட்டார பகுதியில் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இருப்பினும் சில இடங்களில் தண்ணீர் வீணாவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. சென்னையில் தண்ணீர் இல்லாமல் சில ஹோட்டல்கள் ஏற்கெனவே மூடப்பட்டு வரும் இந்த சூழலில் தற்போது தங்கும் விடுதிகளும் தண்ணீர் பற்றாகுறையால் மூடப்பட்டு வருகின்றன.
சென்னை சேப்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பொன்ற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் பெரும்பாலும் மூடப்படுகின்றன. அதற்கு கராணம் தண்ணீர் தட்டுப்பாடு தான். கடந்த சில நாட்களாக சேப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ளவர்கள் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளனர். இதனால் பல தரப்பினர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள சில மேன்ஷன்களில் அறிவிப்பு பலகை வைத்து மூடப்பட்டு வருகின்றன.
பல மேன்ஷன்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தண்ணீர் மிகக் குறைவாக இருப்பதால்,கட்டுமான நிறுவனங்கள் கூட தங்களது கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் சில வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் ஆங்காங்கே தண்ணீருக்காக மறியல் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க வரவிற்கும் பருவ மழை கைக்கொடுக்கும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே பேசிய அமைச்சர் வேலுமணி ”தண்ணீர் தட்டுப்பாடு வதந்தி என்றும், ஹோட்டல்கள் மூடப்படவில்லை” என்றும் கூறியுள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!