அனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்

அனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்
அனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், வேலைவாய்பின்மை, விவசாயிகள் பிரச்னை, வறட்சி ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முத்தலாக் மசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ‌பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தும் வகையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரைன், திமுக எம்.பி., டி.ஆர்.பாலு உள்பட அனைத்துக் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி ஆகியவை குறித்து கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரில், முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என தாம் கேட்டுக் கொண்டதாக ஆசாத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com