[X] Close

தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகள்.... ஓஎன்ஜிசி திட்டம்

ongc-announcement

தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் சமீப காலமாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பை தொடர்ந்து, அடுத்த பரபரப்பாக உருவெடுத்தது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் விவகாரம். இந்தியா முழுவதுமாக 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் முதற்கட்டமாக பணிகள் துவங்கப்படவிருப்பதாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செய்திகள் வெளியாகின. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடந்தது.

பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மாநில முதலமைச்சர் பழனிச்சாமியைச் சந்தித்த போராட்டக் குழுவினர், தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு வழங்க வேண்டிய அனுமதிகளை வழங்காது என்று அவர் உறுதியளித்ததற்குப் பின், இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.


Advertisement

இந்த நிலையில் தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது.

Related Tags : ongcongc

Advertisement

Advertisement
[X] Close