[X] Close

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் - ரன் மெஷின் விராட் கோலி

India-s-Run-Machine-Virat-Kohli-plays-it-cool-batting

ரன்மழை பொழியும் வீரர், எத்தகைய பந்துவீச்சையும் எளிதில் சமாளித்து பவுண்டரிக்கு விரட்டும் அதிரடி ஆட்டத்தால், பாகிஸ்தானிலும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் விராட் கோலி. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான கோலி, கிரிக்கெட் ஆட்ட தொழில்நுட்பத்தில் வல்லவர். பல்வேறு வகையான ஷாட்களை அடிப்பதில் கைதேர்ந்தவர். (FLICK SHOT) ஃபிளிக் ஷாட்,  (COVER DRIVE) கவர் டிரைவ் ஷாட் அடிப்பதில் அசாத்திய திறமை படைத்தவர். 

Image result for virat kohli batting


Advertisement

விராட் கோலி ரன் குவிக்க தொடங்கிவிட்டால், எதிரணியால் இவரை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. 2015 உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த விராட் கோலி, 4 ஆண்டுகளில் மட்டும் 19 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 என 3 வகையான போட்டிகளிலும் கோலியின் சராசரி 50க்கும் அதிகமாக உள்ளது.

Image result for virat kohli batting

ஒருநாள் கிரிக்கெட்டில், குறைந்த போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டியவர், தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசியவர் எனப் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விராட். சேஸிங்கில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியிருக்கிறார் ரன் மெஷின் கோலி. இலக்கை துரத்தி விளையாடும்போது 18 முறை சதம் விளாசியுள்ளார். 


Advertisement

Image result for virat kohli batting

இதுவரை 229 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட்,10 ஆயிரத்து 943 ரன்கள் குவித்துள்ளார். 41 சதங்களை விளாசியுள்ள அவர், அதிகபட்சமாக கடந்த 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் எடுத்தார். கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியிருக்கும் கோலி, இம்முறையும் அதிரடியைத் தொடரும் வேட்கையுடன் களமிறங்குகிறார்.

Image result for virat kohli batting

தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, உலகக்கோப்பை தொடரில் ரன் வேட்டையை தொடருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close