[X] Close

பொம்மை கார் விளையாடிய தோனி

Dhoni-Sits-On-Floor-To-Play-With-Tahirs-Son

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஸ்பின் பவுலர் இம்ரான் தாஹிர் மகனுடன் கிரிக்கெட் வீரர் தோனி பொம்மை கார் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் புனே அணிக்காக விளையாடி வருகிறார். இதில் அதிரடியாக அவர் ரன்களை குவிக்கவில்லை என்றாலும் டிவிட்டரில் அவர்தான் அதிக பிரபலமான கிரிக்கெட் வீரர். புனே அணிக்காக விளையாடும் இம்ரான் தாஹிர் மகனுடன் இவர் பொம்மை கார் விளையாடும் வீடியோ, இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புனே விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தோனி, பொம்மை கார் விளையாடியதை அங்குள்ள ரசிகர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close