கொல்கத்தாவில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடக்கும் போராட்டத்தை அடுத்து சுமார் 100 மருத்துவர்கள் ராஜினாமா செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் நில்ரதன் சர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர், பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அவர் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப் பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவரின் இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த சில நாட்களாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மாநிலத்தில் மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் நடைபெறும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அப்போது தங்களுக்கு நீதி வேண்டும் என மருத்துவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் கோபமடைந்த மம்தா, மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சதி செய்வதாக புகார் சொன்னார். பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்துக்குள் பணிக்கு திரும்ப உத்தரவிட்டார். இல்லை யென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அதையும் மீறி மருத்துவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது. ஐந்தாவது நாளாக நீடிக்கும் போராட்டத்தால், மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, மேற்கு வங்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் 100 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய விரும்பு வதாக, நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி