[X] Close

வெல்வது எப்படி? தோனி... கோலி ஆலோசனை

Dhoni--kholi-Discuss-About-england-series

இங்கிலாந்து தொடரை வெல்வது குறித்து தோனியும், கேப்டன் விராட் கோலியும் பயிற்சியின் போது ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கிடையேயான ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகுவதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட் போட்டிக்கும் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து இங்கிலாந்து தொடரை வெல்லும் நோக்கில் புனேவில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தோனி, விராட் கோலி இருவரும் பவுன்டரி எல்லையில் பயிற்சி செய்தனர். இருவரும் நீண்ட நேரம் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது இங்கிலாந்து அணியை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து ஆலோசித்தனர். இவர்களுடன் பயிற்சியாளர் அணில்கும்ப்ளேவும் உடன் இருந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் குறித்து பேசியதாக தெரிகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close