[X] Close

சாலையோரம் வசித்த குடும்பம் மீது மோதிய கார்.. மனைவி கண்முன்னே இறந்த கணவர்..!

Accident-near-Kancheepuram

சாலையோரம் வசித்துவந்த குடும்பத்தின் மீது கார் மோதிய விபத்தில், மனைவி கண் முன்னே கணவன் உயிரிழந்த சோக சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது. 


Advertisement

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கத்தில், அருண் என்பவர் தன் குடும்பத்துடன் சாலையோரம் வசித்து வந்தார். சாலையோரம் கிடக்கும் காகிதம் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். வழக்கம்போல சாலையோரம் குடும்பத்துடன் தூங்கி, காலையில் கண்விழித்து அமர்ந்திருந்தார் அருண். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற கார் ஒன்று நிலைதடுமாறி சாலையோரம் அமர்ந்திருந்த அருண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வேகமாக மோதியது. இதில் மனைவி கண்முன்னே கணவர் அருண் துடிதுடித்து இரத்த வெள்ளத்தில்  உயிரிழந்தார்.


Advertisement

படுகாயமடைந்த மனைவியான முத்தாள் மற்றும் குழந்தை ஆகியோர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close