கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அணுமின்நிலையம் விளக்கமளித்துள்ளது.
கூடங்குளம் அணு உலையின் ஒன்று மற்றும் இரண்டாம் அலகுகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும் மற்ற அணு உலை கழிவுகள் கொண்டு வரப்படாது எனவும் தெரிவித்துள்ளது. சேமித்து வைக்கப்படும் அணுக்கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், அவற்றை எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தபடலாம் என குறிப்பிட்டுள்ளது.
அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அணுக்கழிவு மையம் அமைய உள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது செய்து வரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும், அணுக்கழிவு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூடங்குளம் அணுமின் நிலையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம் இந்த விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai