Published : 14,Jun 2019 02:06 AM

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

TN-CM-visit-delhi-today

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிறகு நிதி ஆயோக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. விவசாயத்தை மேம்படுத்துவது, விவசாயிகளின் நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி வேகம் பெற நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை முதலமைச்சர் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்