[X] Close

டெல்லியில் 25-ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!

cauvery-managment-meeting-on-24-june-in-delhi

காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 24-ஆம் தேதி டெல்லியில் மீண்டும் கூடுகிறது.

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடகா அரசு நீரை திறக்கவில்லை. இதனிடையே கர்நாடகா நீர் திறக்காதது குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 24-ஆம் தேதி டெல்லியில் மீண்டும் கூடுகிறது. காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.


Advertisement

கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close