உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து செய்தி சேகரிக்க சென்ற டிவி நிருபரை, ரயில்வே போலீசார் இருவர் சரமாரியாக தாக்கினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி என்ற பகுதி அருகே சரக்கு ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்ததும் தனியார் டிவியை சேர்ந்த நிருபர் ஷர்மா என்பவர், அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, சாதாரண உடையில் இருந்த ரயில்வே போலீசார் ராகேஷ் குமாரும், காவலர் சஞ்சய் பவாரும், அந்த நிருபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, நிருபரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காகவும், வேண்டுமென்றே காலை 7 மணி வரை லாக் அப்பில் அடைத்து வைத்த குற்றத்திற்காகவும், போலீசார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அண்மையில் உத்தரப் பிரதேச அரசால் ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார். இந்த முறை மத்திய அரசுத்துறையான ரயில்வே துறை போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்