அதிமுக கூட்டியுள்ள எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இன்று நடைபெறவுள்ளது.
’’அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும், இரட்டைத் தலைமையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம். அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். ஆளுமைத் திறனுடைய ஒரு தலைவர் இல்லை. இதனால் கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது’’ மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் குரல் கொடுத்தார். ‘இரட்டை தலைமை இருப்பதால், தலைவர்களுக்குள் ஈகோ இருப்பதாக நினைக்கிறோம்’ என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் ராஜன் செல்லப்பாவை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் பங்கேற்கவில்லை. அவர் உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்