ஒற்றைத் தலைமையா ? இரட்டைத் தலைமையா ? இன்று கூடுகிறது அதிமுக கூட்டம்

ஒற்றைத் தலைமையா ? இரட்டைத் தலைமையா ? இன்று கூடுகிறது அதிமுக கூட்டம்
ஒற்றைத் தலைமையா ? இரட்டைத் தலைமையா ? இன்று கூடுகிறது அதிமுக கூட்டம்

அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் முதல்முறையாக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள்‌ கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும், இரட்டைத் தலைமையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் முடிந்ததும் கூட்டம் நடைபெற்றிருந்தால் சர்ச்சையை அதிமுக தவிர்த்திருக்கலாம் என்றும், சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவ‌ர கூட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கடந்த 8ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, “அதிமுகவுக்கு ஒரே தலைமைத் தேவை. இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவர் தலைமையில் கட்டுப்பாட்டுடன் கொண்டுசெல்ல வேண்டும். பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெயலலிதாவினால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். தினகரன் என்ற மாயை முடிந்துவிட்டது. இரட்டை தலைமை இருப்பதால் உடனுக்குடன் முடிவு எடுக்க முடியவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். ஜானகிக்குப் பிறகு ஜெயலலிதாவைப் போல அதிமுக தொண்டர்களுடன் இன்னும் யாரும் நெருங்கவில்லை. தலைவர் யார் என்பதை அதிமுக பொதுக்குழுவில் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com