விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் !

விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் !
விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் !

கோவையின் இருகூரிலிருந்து, கர்நாடக மாநி‌லம், தேவன்கோந்தி வரையிலான கெயில் குழாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் கெயில் நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்‌நாடக மாநிலம் பெங்களூரு வரை தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியே எரிவா‌யு குழாயை பதிப்பதற்கு மத்திய அரசின் கெயில் நிறுவனம் தீர்மானம் செய்தது.விவசாய‌ விளைநிலங்கள் வழியே செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையிலும் விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, திட்டம் ‌செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம்‌ சார்பில் கோவை மா‌ட்டம் இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவன்கோந்தி வரை 312 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெட்ரோலிய பொருட்களை ‌எடுத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த‌ முடிவு செய்யப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்‌டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியே செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கும் தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஏற்கெனவே இத்திட்டத்துக்கு தேவையான நிலங்களை எடுப்பது தொடர்பான அறிவிப்பானை, மத்திய அரசின் அரசிதழில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.நிலம் எடுப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்‌பும் நில உரிமையாளர்கள் 21 நாட்களுக்குள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. ஆனால் நிலம் எடுப்பது தொடர்பான முறையான அறிவிப்பு ஏதும் தங்களுக்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com