[X] Close

'கோயில்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது' - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

-No-parking-fees-in-temples---The-court-ordered-to-TN-Govt

இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்களில் சட்டவிரோதமாக கட்டணங்களை வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு பெரியபாளையம் மற்றும் எல்லாபுரம் ஊர்கள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணமும், அப்பகுதியில் வாகன நிறுத்த கட்டணமும் ஜி.டி.மாயாண்டி என்பவரால் சட்டவிரோதமாகவும், அரசின் அனுமதி இல்லாமலும் வசூலிக்கப்படுவதாக கோவிலின் அறங்காவலர் சேதுராமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Image result for கோயில்களில் பார்க்கிங்


Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசிடம் எந்த அனுமதியோ அல்லது அங்கீகாரமோ பெறாமல் கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தமிழக அறநிலையத்துறை கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டுமெனவும், அவ்வாறு வசூலிக்கப்படும் தொகை அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Image result for high court chennai

மேலும், சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதை அந்தந்த மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் கண்காணித்து காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், அவற்றை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சிவில் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து, சேதுராமன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close