Published : 05,May 2017 05:23 AM

ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு: கோலி பார்ட்டியில் அனுஷ்கா

anushka-kohli-in-party

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பத்தாவது வருட பார்ட்டியில் கோலியுடன் அவர் காதலி அனுஷ்கா சர்மாவும் கலந்துகொண்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நடப்பு சீசனில், 11 போட்டிகளில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவியது. வெறும் 5 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த அந்த அணி, அடுத்தச் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டித் தொடங்கி பத்து வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் அந்த அணியில் இடம் பிடித்திருந்த டிவில்லியர்ஸ், கே. எல்.ராகுல் உட்பட பலர் கலந்துகொண்டனர். கோலியின் காதலியும் நடிகையுமான அனுஷ்காவும் இதில் கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியம். அனுஷ்கா, கிரிக்கெட் வீரர்கள் பலருடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.

கோலியும் அனுஷ்காவும் விழாக்களுக்கு ஒன்றாக வருவது இது முதல் முறையல்ல. இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்ற போது அனுஷ்காவும் சென்றிருந்தார். சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் டிஸ்பிளே புகைப்படத்தில் அனுஷ்காவுடன் தான் இருப்பது போன்ற படத்தை கோலி பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்