[X] Close

“நடிகர் சங்கத்திற்கான கட்டடத்தை தடுக்க முயல்கிறார் எஸ்.வி.சேகர்”- விஷால்

Vishal-alleged-SV-Sekar

நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டப்படுவதை தடுக்க எஸ்.வி.சேகர் தொடர்ந்து முயன்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது. நடிகர்கள் நாசர், விஷால் உள்ளிட்டோர் கொண்ட பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கொண்ட மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இன்று தொடங்கிய வேட்புமனுத் தாக்கலில் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், இரண்டு துணைத்தலைவர் பதவிகளுக்கு பூச்சிமுருன், நடிகர் கருணாஸ் ஆகியோரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.


Advertisement

பின்னர் தியாகராயர் நகரில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டடத்தை விஷால், கருணாஸ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் விஷால், நடிகைகள்‌ லதா, குஷ்பூ, கோவை சரளா, நடிகர்கள் விக்னேஷ், ரமணா உள்ளிட்டோர் செய்தியாளர்களுடன் பேசினர். அப்போது, நடிகர் சங்கக் கட்டடத்துக்கு தடை கோரி எஸ்வி சேகர் தொடர்ந்த வழக்கினால், 4 மாதங்களாக கட்டடம் கட்டும் வேலைகள் நடைபெறவில்லை என்று விஷால் கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close