[X] Close

ஒரு தலைக்கு 100 தலைகளை வெட்ட வேண்டும்... பாபா ராம்தேவ்

Baba-Ramdev-Calls-For--100-Heads--For-Each-Indian-Soldier-s-Death

இந்திய வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக பாகிஸ்தான் வீரர்கள் 100 பேரின் தலைகளை வெட்ட வேண்டும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

புது டெல்லியில் தனது நிறுவனப் பொருட்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது வீரர்கள் ஓரிருவரை தலையை வெட்டி சிதைக்கின்றனர் என்றால், நாம் 100 பேர் தலையை வெட்ட வேண்டும். இதில் நாம் இஸ்ரேலைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

நாம் அன்னியப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் ராம்தேவ் கூறினார். கோல்கேட், யுனிலீவர், புராக்டர் அண்ட் காம்பிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மறைமுகமாக சுமார் 50 லட்சம் கோடி முதலீட்டை வைத்துள்ளன என்று குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் ரத்தத்தில் தேசபக்தி ஊறியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close