Published : 07,Jun 2019 07:10 AM

கடத்தல் வழக்கில் போலீஸ் காவலில் இருந்தவர் உயிரிழப்பு : 3 பேர் பணியிடை நீக்கம் 

One-head-constable-and-two-constables-have-been-suspended-in-connection-with-a-case-wherein-a-man-accused-in-a-smuggling-case-died-in-custody

டெல்லியில் சட்டவிரோதமாக மதுக்கடத்தல் வழக்கில் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஒரு தலைமை காவலர் மற்றும் 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

டெல்லியில் சிலர் சட்டவிரோதமாக மதுக்கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாந் நாக்ரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் நயீம் மற்றும் கோவிந்தா என்பது தெரியவந்தது. 

இதில் கோவிந்தாவை நேற்று திடீரென போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் கோவிந்தா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவிந்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அதனால் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு கோவிந்தாவின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார்தான் அவரை அடித்து துண்புறுத்தி கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். கோவிந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதை போலீஸ் முதலில் எங்களிடம் சொல்லவேண்டியதுதானே? ஏன் அப்போது சொல்லவில்லை. இப்போது இறந்தவுடன் சொல்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர். 

ஆனால் உறவினர்கள் குற்றச்சாட்டுகளுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய ஒரு தலைமை காவலர் மற்றும் 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்