[X] Close

1000 கோடியை நெருங்கும் பாகுபலி

Bahubali-Box-office-Hit

பாகுபலி 2 திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் 9,000 திரைகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பாகுபலி 2 - தி கன்க்ளூசன் படம், முதல் ஆறு நாட்களில் வசூலில் சாதனை படைத்து, இந்திய திரையுலகையே பிரமிக்க வைத்துள்ளது. அதன்படி 6 நாட்களில் 792 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக, பாக்ஸ்ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிகே, தங்கல் படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை, பாகுபலி 2 முதல் ஆறு நாட்களில் முறியடித்துள்ளது. ஹிந்தியில் மட்டும் பாகுபலி 2 படம், ஆறு நாட்களில் 375 கோடி ரூபாய் வசூலித்து, பாலிவுட் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் பாகுபலி முதலிடத்திற்கு‌ வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வசூலில் 800 கோடியை எட்டியுள்ள பாகுபலி 2 விரைவில் 1000 கோடியை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close