தெலங்கானாவில் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12பேர் ஆளும் ராஷ்ட்ரீய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா சட்டசபையில் ஆளும் ராஷ்டிரீய சமிதி கட்சிக்கு 98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் வசம் 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மக்களவைத் தேர்தலின் போதே காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பலர் ஆளும் கட்சிக்கு தாவினர்.
இந்நிலையில், தெலங்கானா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகர் பொச்சாரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்துள்ளனர். அப்போது, ஆளும் டி.ஆர்.எஸ்-சில் காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சியின் செயல் தலைவரும், முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவை பிரகதி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். அப்போது, சட்டசபையில் டிஆர்எஸ் உடன் காங்கிரஸை இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்